×

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதற்கு தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்க கோரி திமுக வழக்கு

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதான தர்ம பேச்சு குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் கடமை தவறிவிட்டனர்.

இரண்டு அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்து திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், தனி நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் சேகர் பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், சனாதன பேச்சு தொடர்பாக தொடரப்பட்ட கோ வாராண்டோ வழக்கு மற்றொரு நீதிபதி முன்பு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாமல் சனாதனம் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் கருத்தை அரசியல் எதிரிகள் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். தங்களை கேட்காமல் இந்த கருத்தை கூறியது அடிப்படை உரிமையை மீறிய செயல் என்பதால், தனி நீதிபதி கருத்துகளை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

The post சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதற்கு தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்க கோரி திமுக வழக்கு appeared first on Dinakaran.

Tags : DMK ,Minister ,Udayanidhi ,Sanathanam ,Chennai ,Madras High Court ,Judge ,G. Jayachandran ,Udhayanidhi Stalin ,Sanadana ,Udhayanidhi ,
× RELATED பருவ மழை காலத்தில் வெள்ள நீர் விரைந்து...